மீளவும் எழுதுவோம்....

Wednesday, June 2, 2010

மழலைச் சிரிப்பு
மௌன ராகங்கள்
இனியும் வேண்டாம்.
ஊமையாய் போன எம் உணர்வுகளை எழுதுவோம்
சரித்திரங்களை மீளவும் மீளவும் எழுதுவோம்
அந்நியராட்சியில் வாழும் முந்தி வந்த தமிழை எழுதுவோம்
ஆயுதங்களால் முடிக்கப்பட்ட எம் தலையெழுத்தை எழுதுவோம்
புதைகுழியில் நின்று மீட்கப்பட்ட தமிழராய் இருந்து எழுதுவோம்
வானமே பிளந்து எங்களை அள்ளிய
வரலாற்று கதையெல்லாம் எழுதுவோம்
மண்ணை முத்தமிட்ட எம்மினத் தமிழர்கள் பற்றி எழுதுவோம்
கூண்டோடு அழிக்கப்பட்ட எம்மினத்தை பற்றி எழுதுவோம்
வீழ்ந்து விட்டோம் என்றோருக்கு முன்னால்
வாழ்ந்து காட்ட எம் வீரக்கதையெல்லாம் எழுதுவோம்
சாயங்கள் பூசாமல் உண்மைகளை எழுதுவோம்
அடுத்த தலைமுறைக்கு
எழுத்துக்களில் சொல்லிவிட்டு போவோம்
நாம் சாகடிக்கப்பட்ட சரித்திரங்களை!
அவர்கள் கட்டியெழுப்ப வேண்டிய தமிழினத்தை!